அனைத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் – முஷாரப்பின் புதுக் கட்சி
லண்டன்: அனைத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் என்ற பெயரில் புதுக் கட்சி தொடங்குகிறார் முன்னாள் பாகிஸ்தான் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப்.
இதுதொடர்பாக துபாயில் மே 2ம் தேதி தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை அவர் கூட்டியுள்ளார். 10 நாட்கள் துபாயில் தங்கவுள்ளாராம் முஷாரப். இந்த தங்கலின்போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியில் தனக்கு ஆதரவாக உள்ளவர்களுடன் பேசவுள்ளாராம்.
துபாய் சந்திப்புக்கு முன்னாள் உள்துறை அமைச்சர் பைசல் சலே ஹயாத், முன்னாள் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் முகம்மது அலி துரானி ஆகியோர் முக்கியமாக அழைக்கப்பட்டுள்ளனராம்.
முஷாரப்பின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான வக்கீல் முகம்மது அலி சைப் என்பவர்தான் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளாராம்.
முஷாரப்பின் புதிய கட்சியான அனைத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கின் பெயரை தேர்தல் ஆணையத்திலும் இந்த சைப் பதிவு செய்துள்ளாராம். கட்சித் தலைவராக சைப் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போதைக்கு சைப் தலைமையில் கட்சியை நடத்துவது என்றும், பாகிஸ்தான் திரும்ப உகந்த சூழல்ஏற்படும்போது தானே தலைவராவது என்றும் முஷாரப் திட்டமிட்டுள்ளாராம்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தானை விட்டு வெளியேறினார் முஷாரப். அப்போது முதல் லண்டனிலும், துபாயிலுமாக மாறி மாறி வாசம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications