குஷ்புவை வரவேற்கிறேன்!-ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: நடிகை குஷ்பு கவர்ச்சியானவர், நல்ல புத்திசாலி... அவரது வருகை காங்கிரஸ் கட்சிக்கு மேலும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும் என்று காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் வசித்தபோது குஷ்பு குடும்பத்தினர் காங்கிரசில் இருந்தனராம். தனது படுக்கையறையில் ராஜீவ் காந்தி படங்கள் வைத்திருந்ததாகவும் அவரின் தீவிர ரசிகை நான் என்றும் குஷ்பு கூறியிருந்தார்.
இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் குஷ்புவின் வருகை காங்கிரசுக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்று அக்கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள். தேர்தல் பிரசாரத்துக்கும் அவர் உதவுவார் என்று நம்புகின்றனர்.
குஷ்பு காங்கிரசில் இணைவது பற்றி தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரான இளங்கோவனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
குஷ்பு காங்கிரசில் சேர்ந்தால் அவரை வரவேற்கும் முதல் ஆளாக நான் இருப்பேன். முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும் சுதந்திரமாக பேசுபவர்களுக்கும் காங்கிரஸ் சிறந்த இடம்.
குஷ்பு போல் புத்திசாலித்தனமான பெண்கள் சமூக பிரச்சனைகள் சம்பந்தமான தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு காங்கிரஸ்தான் சிறந்த இடம்.
பொதுவாக நடிகைகள் கவர்ச்சியாக இருப்பார்கள். ஆனால் குஷ்பு கவர்ச்சியும், புத்திகூர்மையும் உள்ளவர் என்றார்.
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் கூறுகையில், நடிகை குஷ்பு புத்திசாலித்தனமான பெண். காங்கிரசில் அவர் சேருவதை முழு மனதோடு வரவேற்கிறேன். குஷ்பு பிரபலமானவர். அவர் காங்கிரசில் இணைவது கட்சி வளர்ச்சிக்கு உதவும். சட்டமன்ற தேர்தலுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
கோபண்ணா கோபம்:
ஆனால், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவரான கோபண்ணா குஷ்புவின் கருத்தை விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், திருமணத்திற்கு முன்பு உறவு கொள்வதில் தவறில்லை என்று கூறுவதற்கு நடிகை குஷ்புவுக்கு இருக்கும் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.
சமூகத்தில் சில மரபுகள், பண்பாட்டின் அடிப்படையில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று கூறுகின்றன. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று கூறுபவர்களை சட்டம் ஏற்றுக் கொண்டாலும் அந்த கருத்தை சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications