நெல்லை டயர் நிறுவனத்தில் 53 தொழிலாளர்கள் சஸ்பெண்ட்
நெல்லை: நெல்லை அருகே டயர் நிறுவனத்தில் வேலை நிறுத்ததில் ஈடுபட்ட 53 தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான டயர் நிறுவனம் உள்ளது. இங்கு 900க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சில தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தொழிலாளர் நல ஆய்வாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் உடன்பாடு ஏற்படவி்ல்லை. இதனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 53 தொழிலாளர்களை நிர்வாகம் திடீரென சஸ்பெண்ட் செய்துள்ளதாக தெரிகிறது. இதை கண்டித்து இன்று நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் நிறுவனம் முன் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தாழைத்து டிஎஸ்பி ராஜராஜன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications