கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி – காங். வட்டாரத் தகவல்கள்

முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் டெல்லி வந்தார். முதலில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலைச் சந்தித்தார். நேற்று காலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். மாலையில் பிரதமரை சந்தித்தார். கருணாநிதி தன்னை சந்தித்து விட்டுச் சென்ற பின்னர் அவசரம் அவசரமாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார் சோனியா.
இந்த சந்திப்புகளின்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்து முதல்வர் கருணாநிதி சிலவற்றைக் கூறியிருந்தாலும் உண்மையில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும் காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் சில இதுபற்றித் தெரிவிக்கையில், சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் இடையிலான திடீர் சந்திப்பின்போது அமைச்சர் ராஜா விவகாரம் குறித்து பேசப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அதேசமயம், முதல்வரின் மகள் கனிமொழியை மத்திய அமைச்சராக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம். கனிமொழி மத்திய அமைச்சராவது உறுதி. விரைவில் அவர் அமைச்சரவையில் சேருகிறார் என்று தெரிவித்தனர்.
அதேசமயம், மு.க.அழகிரி விவகாரம் குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் எதுவும் பேசிக் கொள்ளவில்லையாம். கனிமொழிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் திமுகவிலிருந்து யார் நீக்கப்படுவார் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
முன்னதா சோனியா காந்தியை முதல்வர் கருணாநிதி சந்தித்தபோது, ராஜா ஒரு தலித் என்பதால்தான் பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். எனவே அவர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தாராம். இதையே பிரதமரிடமும் முதல்வர் கூறியதாக கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications