மும்பை ஸ்டிரைக்: மமதா விளக்கமளிக்க கோரி நாடாளுமன்றத்தில் அமளி – ஒத்திவைப்பு
டெல்லி: மும்பை ரயில் ஸ்டிரைக் தொடர்பாக ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி விளக்கம் அளிக்கக் கோரி லோக்சபாவில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து லோக்சபா பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கடந்த 2 நாட்களாக லோக்சபாவில் பெரும் அமளி நிலவி வந்த நிலையில் இன்று மும்பை ரயில் ஸ்டிரைக் பிரச்சினை சூட்டைக் கிளப்பியது.
இன்று காலை சபை கூடியதும் இந்தப் பிரச்சினையை பாஜக, சிவசேனா, இடதுசாரிஉறுப்பினர்கள் எழுப்பினர்.
மும்பையில் ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டு வரும் ஸ்டிரைக்கை ஒடுக்க எஸ்மாவை பயன்படுத்துவதற்கு இடதுசாரி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக மற்றும் சிவசேனா உறுப்பினர்கள் பேசுகையில், மும்பையில் ரயில்கள் ஓடாவிட்டால் நாடாளுமன்றத்தையும் இயங்க விட மாட்டோம் என்று கூறினர்.
இதனால் பெரும் அமளி நிலவியதால், பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி தொடர்ந்தது.
பின்னர் இந்தப் பிரச்சினை தொடர்பாக விவாதம் நடத்த சபாநாயகர் மீரா குமார் அனுமதி அளித்தார். அப்போது பாஜக, சிவசேனா, இடதுசாரி உறுப்பினர்கள் ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜியை கடுமையாக சாடிப் பேசினர். மமதா விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினர்.
தொடர்ந்து பெரும் அமளியாக இருந்ததால், அவையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்து வெளியேறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications