விபசார வேட்டைக்கு சென்ற சப்- இன்ஸ்பெக்டரை காரில் கடத்திய கும்பல்
சென்னை: சென்னையில் விபச்சார வேட்டைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது.
சென்னை திருமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார். இவர் மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிக்கும் தனிப்படை பிரிவில் பணியாற்றி வருகிறார். நேற்றிரவு மோட்டார் சைக்கிளை திருடும் கும்பலைச் சேர்ந்த சிலர் கிண்டியில் பதுங்கியிருப்பதாக சப்-இன்ஸ்பெக்டருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரும், மற்றொரு போலீஸ்காரரும் மோட்டார் சைக்கிளில் கிண்டிக்கு விரைந்தனர். ஆனால் அங்கு மோட்டார் சைக்கிள் திருடர்கள் யாரும் சிக்கவில்லை.
இதையடுத்து திருமங்கலம் திரும்பி இருவரும் கிண்டி தொழிற்பேட்டை நூறடி சாலை சந்திப்பில் சாலையோரம் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த கார் அருகே சென்றனர்.
காரில் இருந்த 2 ஆண்கள் மற்றும் 3 பெண்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசவே காரில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்யும் கும்பலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து தனது மோட்டார் சைக்கிளை மற்றொரு போலீஸ்காரரிடம் கொடுத்துவிட்டு காரில் ஏறினார் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார். காரை கிண்டி காவல் நிலையத்திற்கு ஓட்டுமாறு டிரைவரிடம் கூறினார்.
ஆனால், காரை படுவேகத்தில் ஓட்டிய டிரைவர் அதை கிண்டி காவல் நிலையத்தில் நிறுத்தாமல் அடையாறு நோக்கி ஓட்டினார்.
இதையடுத்து டிரைவரை சிவக்குமார் தாக்கவே அண்ணா பல்கலைக்கழகம் அருகே காரை நிறுத்திவிட்டு அனைவரும் இறங்கி ஓடினர். அதில் டிரைவரை மட்டும் சப்-இன்ஸ்பெக்டர் மடக்கிப் பிடித்தார்.
காரிலிருந்த இன்னொரு நபரும் 3 பெண்களும் தப்பியோடிவிட்டனர்.
பிடிபட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்த விபச்சார புரோக்கர் சுஜித் கண்ணன் (30) என்று தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தப்பியோடிய நபரின் பெயர் மதன் என்றும் அவருடன் தப்பி சென்ற 3 பெண்களை வைத்து விபச்சாரம் நடச்சியதும் தெரிய வந்தது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித் கண்ணனை கைது செய்தனர். தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் சப்இன்ஸ்பெக்டர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications