மாவட்டங்களில் பள்ளிகளின் நேரத்தை மாற்றியமைக்க பள்ளிக்கல்வி இயக்குநர் யோசனை

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்ற்றிக்கையில்,
பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி துவங்கும் நேரம், சென்னை தவிர இதர மாவட்டங்களில் காலை 9.30 மணி என்றும், சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, காலை 8.30 மணி அல்லது 9 மணி அல்லது 9.30 மணி என மூன்று நிலைகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் போலவே, இதர மாவட்டங்களிலும் பள்ளிகளின் அமைவிடம் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, மாணவர்கள் ஒரே நேரத்தில் பள்ளிக்கு செல்வதில் சிரமங்கள் ஏற்படுவதாக, துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளிகளின் அமைவிடம், போக்குவரத்து வசதிகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் இதர இடர்பாடுகளின் அடிப்படையில், பள்ளி துவங்கும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் இருந்தால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கலெக்டரின் ஆலோசனையைப் பெற்று, பள்ளி துவங்கும் நேரத்தை மாற்றி அமைக்கலாம்.
இது தொடர்பாக, மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை நடத்தி, அவர்களது கருத்தை முதன்மைக் கல்வி அலுவலர்கள் பெற வேண்டும். அதன்பின், மாவட்ட கலெக்டருடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை, இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், காலதாமதம் இன்றி உடனடியாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் செயல்பட வேண்டும் என்று பெருமாள்சாமி கூறியுள்ளார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications