மலையாளத்தை செம்மொழியாக்க பிரதமரிடம் கேரளா கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: மலையாளத்தையும் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கேரளா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் எம்.ஏ.பேபி தலைமையிலான கேரள அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்துப் பேசினர். பின்னரிடம் கோரிக்கையை வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேபி கூறுகையில், மலையாள மொழி 1000 ஆண்டு பழமை வாய்ந்த தொன்மையான மொழியாகும். தென் இந்திய மொழிகளிலே செம்மொழியாவதற்கு மலையாளத்துக்கு அனைத்து தகுதியும் இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளை விட மலையாள மொழி தெய்வீகதன்மை கொண்டது ஆகும். எனவே மலையாளத்தை செம்மொழியாக அறிவிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications