பக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான்
சென்னை: பெண் பக்தர்களுக்கு போதை லேகியம்கொடுக்கப்பட்டதாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கல்கி பகவான்
சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையம் அருகே பத்துலவல்லத்தில் அமைந்துள்ளது கல்கி ஆசிரமம். இங்கு கல்கி பகவானாக இருப்பவரின் உண்மையான பெயர் விஜயகுமார். இவர் முன்பு எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்தவர். இவரது மனைவி புஜ்ஜம்மா. இவர் தனது பெயரை அம்மா பகவானாக மாற்றி பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார்.
கல்கி ஆசிரமத்தில் பெரும் மோசடிகள் நடப்பதாக நீண்ட காலமாகவே புகார்கள் உள்ளன.சமீபத்தில் இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. கல்கி ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு தீட்சை அளிப்பதாக கூறி போதை லேகியம் வழங்கப்படுவதாக ஏ.பி.என். தெலுங்கு டி.வி. படம் பிடித்து ஒளிபரப்பியது. அதில் போதை லேகியம் சாப்பிட்ட பெண்கள் மயங்கிவிழும் காட்சிகள் இடம் பெற்றன. இதுநாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கல்கி ஆசிரம நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தவில்லை.
இதற்கு விஜயவாடாவை சேர்ந்த கல்கி ஆசிரம பெண் பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பற்றி பக்தர் சுதாராணி கூறும்போது, நான் கடந்த 6 ஆண்டுகளாக கல்கி ஆசிரமம் சென்று வருகிறேன். அங்கு தீட்சைகளால் கொடுக்கப்படும் லேகியத்தில் ஒருவித போதைப்பொருள் கலந்துள்ளது. அதை சாப்பிட்ட பெண்கள் பல மணி நேரம் மயக்க நிலைக்கு சென்று விடுகிறார்கள்.
இந்த லேகியம் சாப்பிட்ட பலர் சிறுநீரக கோளாறு, வயிறு கோளாறு, இதய நோய், ரத்த அழுத்த கோளாறின் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள்.
இது பற்றி பல தடவை போலீசில் புகார் அளித்தும் இதுவரை கல்கி பகவானிடம் ஒருமுறை கூட விசாரணை நடத்தவில்லை. போலீசார் கல்கி பகவான், அம்மா பகவான் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களை கடவுள் என்று எங்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பறித்துவிட்டனர்.எனவே, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
தங்களை கடவுள் என்று கூறி ஏமாற்றி வரும் 2 பகவான்களும் பல்வேறு நோய்களின் பிடியில் சிக்கி உள்ளனர் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications