கள்ளக்காதலனுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற பெண் கைது
திருவனந்தபுரம்: பணம் கேட்டுத் தொந்தரவு செய்து வந்த கள்ளக்காதலனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றார் ஒரு பெண்.
கேரள மாநிலம் காயங்குளம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் அரபு நாட்டில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி மிஷியா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெங்களூரில் படித்து வருகிறார். இளைய மகன் மிஷியாவுடன் உள்ளார்.
இரு தினங்களுக்கு முன் இவர்களது வீட்டில் வாலிபர் ஓருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காயங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் இறந்து கிடந்த வாலிபர் உடலில் விஷம் கலந்து இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இறந்து கிடந்த வாலிபர் கொல்லம் நீண்டகரை பகுதியை சேர்ந்த சுனில் என்பதும் தெரிய வந்தது. மிஷியாவுக்கும், சுனிலுக்கும் கள்ள காதல் இருந்தது வந்துள்ளது. அடிக்கடி மிஷியா வீட்டுக்கு இவர் வந்து செல்வார். மிஷியாவுடன் இருந்த தொடர்பை பயன்படுத்தி அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.
இந்த தொந்தரவு தாங்காமல்தான் சம்பவதன்று குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து சுனிலை மிஷியா கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து மிஷியாவை காயங்குளம் போலீசார் நேற்று கைது செய்தனர். காயங்குளம் குற்றவியல் முதல் வகுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications