காய்த்த மரம் தான் கல்லடி படும்-ஸ்டாலின்

சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்து ஸ்டாலின் பேசியதாவது:
இங்கு ஆளுங்கட்சியினரும், தோழமை கட்சியினரும் போலீஸ் பணிகளை பாராட்டி சிறப்பாக பேசினார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான கண்டன கணைகளை தொடுத்து பேசினார்கள். இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான்.
இந்த ஆட்சி அதை நிச்சயமாக அலட்சியப்படுத்தி விடாது. காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பார்கள். அது உண்மைதான். சிறு சிறு சம்பவங்களை காரணம் காட்டி சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டதாக கூறி மாய தோற்றத்தை உருவாக்கி விடக்கூடாது.
கொலை- குற்ற நிகழ்வுகளை கண்டு பிடிப்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. குற்ற நிகழ்வுகளை எடுத்துக்கொண்டால் 2009ல் 1 லட்சத்து 74 ஆயிரத்து 691 வழக்கு பதிவு செய்யப்பட்டதில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 200 வழக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல பொருட்களை மீட்பதிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
ரூ. 80 கோடியே 22 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனதில் ரூ. 58 கோடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதே போல சொத்துக் கண்டுபிடிப்பு வழக்குகள் 79 சதவீதம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொலை குற்றம் பட்டியலை விவரித்து பேசினார்கள். 2007ல் 1,521 கொலைகளும், 2008ல் 1630 கொலைகளும், 2009ல் 1,644 கொலைகளும் நடந்துள்ளன. இதில் உணர்ச்சிவசப்பட்டு நடந்த கொலைகள்தான் அதிகம்.
2009ல் நடந்த 1,644 கொலைகளில் 453 கொலைகள் குடும்ப சண்டை, வாய்தகராறில் நடந்துள்ளன. முன் பகையில் 272ம், காதல் வழக்குகளில் 117ம், நிலத் தகராறில்102 கொலைகளும் நடந்துள்ளது. பணம், லாபத்துக்காக நூற்றுக்கும் குறைவான கொலைகளே நடந்துள்ளன.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் கொலை குற்றங்கள் குறைவாகவே நடந்துள்ளன. 95 சதவீத குற்றவாளிகளை கண்டுபிடித்து இந்த அரசு கைது செய்துள்ளது.
.
இந்த அரசு பொறுப்பேற்றபின், கடந்த நான்கு ஆண்டுகளில், 15,084 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தற்போது 9,000 காவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 2010-2011ம் ஆண்டில், தமிழ்நாடு சீருடைக் காவல் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் 5,588 இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார் ஸ்டாலின்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications