மாஜி மந்திரி செக்ஸ் ஹாலப்பாவுக்கும் நெஞ்சு வலி வந்திருச்சு!

Subscribe to Oneindia Tamil

Hallappa
பெங்களூர்: தனது நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவான கர்நாடக முன்னாள் அமைச்சர் ஹாலப்பா நேற்று அவரது சொந்த ஊரான ஷிமோகாவில் கைது செய்யப்பட்டார்.

தனது நண்பர் வெங்கடேச மூர்த்தியின் வீட்டில் தங்கியிருந்தபோது அவரது மனைவி சந்திரவதியை பலாத்காரம் செய்தார் ஹாலப்பா. இது குறித்து தகவல் வெளியானதையடு்த்து தலைமறைவானார்.

இந் நிலையில் நேற்று மாவட்ட எஸ்பியிடம் சரணடைந்த அவர் கைது செய்யப்பட்ட அவர் சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு மரபணு பரிசோதனை நடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், 'பிராடு' அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் அனைவருக்கும் கைது செய்யப்பட்டவுடன் வரும் 'நெஞ்சு வலி' இவருக்கும் வந்துவிட்டது. இதையடுத்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளார்.

மிரட்டலால் வீட்டை காலி செய்த தம்பதி:

இந் நிலையில் வெங்கடேச மூர்த்தி-சந்திரவதிக்கு ஹாலப்பாவின் ஆட்களால் தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் தங்கது வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்துக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+