சொத்து குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மனுவை வாபஸ் பெற்ற ஜெ.
டெல்லி: வருமானத்தை மீறி சொத்துக் குவித்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாபஸ் பெற்றுள்ளார்.
இந்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் சுதர்சன ரெட்டி, சுரீந்தர்சிங் நிக்சார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் முகுல் ரஸ்தோகி ஆஜரானார்.
அதை விசாரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தை நாடாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை ஏன் நாடினீர்கள் என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞரிடம் கேட்டனர்.
அதற்கு அவர், 120, 82வது பிரிவின் கீழ் எங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டை அணுக உரிமை உண்டு என்றார்.
ஆனால் நீதிபதிகள், இந்த வழக்குக்கு அந்தப் பிரிவு பொருந்தாது. எனவே மனுவை தள்ளுபடி செய்யலாமா? என்று கேட்டனர்.
அதற்கு ஜெயலலிதாவின் வழக்கறிஞர், தள்ளுபடி செய்துவிடாதீர்கள், மனுவை நாங்களே வாபஸ் பெற்றுக் கொள்கிறோம். இது தொடர்பாக உங்கள் அறிவுரைப்படி கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடுகிறோம் என்று கூறி மனுவை வாபஸ் பெற்றார்.












Click it and Unblock the Notifications