செம்மொழி மாநாட்டுக்குப் பின் முன் கூட்டியே சட்டசபைத் தேர்தல்?

தமிழக சட்டப் பேரவையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மே மாதம் தான் முடிவடைகிறது. ஆனால், முன்கூட்டியே தேர்தலை நடத்த முதல்வர் கருணாநிதி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது.
இந் நிலையில் வரும் 30ம் தேதி நடக்கும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தயாராகிறது தேர்தல் ஆணையம்:
இந் நிலையில் சட்டசபைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையமும் இப்போதே தயாராக ஆரம்பித்துள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தலுக்கான சில முன்னேற்பாட்டுப் பணிகளை இப்போதே தொடங்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா சமீபத்தில் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை நரேஷ் குப்தா, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கரூர், திருவாரூர் ஆகிய மாவட்டங் ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது வாக்குப்பதிவை ஆன்-லைனில் நேரடியாக ஒளிபரப்பத் தேவையான லேப்- டாப்கள், பிராட்பேண்ட்
வசதிகளை தயார் செய்யுமாறும், இதற்கத் தேவைப்படும் லேப்டாப்கள், வெப் கேமராக்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு விரிவான அறிக்கை அனுப்பி வைக்குமாறும் குப்தா உத்தரவிட்டார்.
அதே போல வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் சரிபார்ப்பு பணியும் நடைபெற்று வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications