சிபிஎம்மின் வன்முறை அரசியலுக்கு இளைஞர் காங்.கிரஸினர் பலியாகி விடக் கூடாது- ராகுல் காந்தி
காசர்கோடு: கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வன்முறை அரசியலைக் கையாண்டு வருகின்றனர். இதனால் தூண்டப்பட்டு பதிலடி நடவடிக்கைகளில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டு விடாமல் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கேரள மாநிலம் காசர்கோடு வந்த ராகுல் காந்தி அங்கு வட மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை சந்தித்துப் பேசினார். அப்போதுஅவர் கூறுகையில், கேரளாவில் சட்டசபைத் தேர்தலும், உள்ளாட்சித் தேர்தலும் வரவுள்ளது.
இந்த சமயத்தில், வன்முறை அரசியலை கையாண்டு இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை அதில் சிக்க வைத்து கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த சிபிஎம் முயலுகிறது. இதில் சிக்கி விடாமல் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கவனத்துடன் இருக்க வேண்டும்.
உடனடியாக தனது வன்முறை அரசியலை சிபிஎம் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பழைய பாணி வன்முறை அரசியலை பயன்படுத்தி லாபம் காண முயல வேண்டாம் என அக்கட்சியினரை கேட்டுக் கொள்கிறேன். அவர்களுடைய கொள்கைகள், காலம் கடந்தவை. மாறி வரும் காலத்திற்கு சற்றும் பொருந்தாதவை என்றார் ராகுல் காந்தி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications