நாளை மறுதினம் பிளஸ்டூ தேர்வு முடிவுகள்-தட்ஸ்தமிழில் காணலாம்!
Subscribe to Oneindia Tamil

அன்றைய தினம் காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுகள் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை பிளஸ்-2 தேர்வு நடந்தன. இந்தத் தேர்வை 7.5 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
தேர்வு முடிந்ததும் 44 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றன. அதன் பின்னர் மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டன. பின்னர் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்றது.
கடந்த ஆண்டு மே 14ம் தேதி தான் பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியானது. அதே தேதியில் இந்த ஆண்டும் வெளியாகிறது.
தேர்வு முடிவுகளை உடனுக்குடன் உங்கள் தட்ஸ்தமிழில் காணலாம்.












Click it and Unblock the Notifications