ரஞ்சிதா குறித்து நடிகர்களிடம் போலீஸ் விசாரணை!
இன்னொரு பக்கம், உடனே விசாரணைக்கு வரவேண்டும். இல்லையேல் கடும் நடிவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, மூன்றாவது நோட்டீஸையும் ரஞ்சிதாவுக்கு அனுப்பியுள்ளது கர்நாடக போலீஸ்.
இந்த பலமுனை நெருக்கடி காரணமாக அடுத்த இரு தினங்களில் பெங்களூருக்கு ரஞ்சிதா வருவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
செக்ஸ் மோசடி. ஆன்மீக மோசடி, நில மோசடி, பொதுமக்கள் பணத்தை கையாண்டதில் முறைகேடு, செக்ஸ் ஒப்பந்தம் போட்டு பெண்களுடன் உறவு என பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, 8 நாள் போலீஸ் விசாரணைக்குப் பின் ராம் நகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நித்யானந்தா.
இவருடன் செக்ஸ் காட்சிகளுடன் தோன்றிய நடிகை ரஞ்சிதாவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து, ரஞ்சிதாவுக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகின்றனர். ஆனால் ரஞ்சிதாவோ இதோ அதோ என்று இழுத்தடித்து வருகிறார்.
பெங்களூர் சிஐடி அலுவலகத்துக்கு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு ஏற்கனவே 2 தடவை நடிகை ரஞ்சிதாவுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இதையடுத்து, விசாரணைக்கு வருமாறு ரஞ்சிதாவுக்கு கர்நாடக சி.ஐ.டி. போலீசார் மூன்றாவது நோட்டீஸை நேற்று அனுப்பினர்.
இதையடுத்து, இன்னும் இரு நாட்களில் நடிகை ரஞ்சிதா பெங்களூர் வந்து சி.ஐ.டி. போலீசார் முன்பு ஆஜர் ஆவார் என்று ரஞ்சிதாவின் வழக்கறிஞர் தெரிவித்ததாக கர்நாடக போலீஸார் கூறினர்.
நடிகர்கள், இயக்குநர்களிடம் விசாரணை:
இதற்கிடையே, ரஞ்சிதாவின் வாக்குறுதியை இனி நம்ப முடியாது என முடிவு செய்த கர்நாக போலீஸ் அவர் மறைந்திருக்கும் இடத்தை தீவிரமாகத் தேடத் துவங்கிவிட்டனர். ரஞ்சிதா கிடைத்துவிட்டால், நித்யானந்தாவுக்கு எதிராக பல முக்கிய தகவல்களைப் பெற முடியும் என்பதில் போலீசார் உறுதியாக உள்ளனர்.
எனவே ரஞ்சிதாவுக்கு நெருக்கமான நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரஞ்சிதா எங்கே பதுங்கி இருக்கிறார் என்று அவர்களிடம் கேட்டு வருகின்றனர்.
இதையெல்லாம் அறிந்த ரஞ்சிதா, இன்னும் ஒரிரு நாளில் ரஞ்சிதா போலீசில் ஆஜராகி சாட்சியம் அளிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.
நித்யானந்தாவின் சிறைக்காவல் நீடிப்பு:
இந் நிலையில் நித்யானந்தாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தாவிற்கு எதிராக கூடுதல் ஆவனங்கள் தாக்கல் செய்த சிஐடி போலீசார், நித்யானந்தாவின் சிறைக் காவலை நீட்டிக்க வலியுறுத்தினர்.
இந்த வேண்டுகோளை ஏற்ற ராம்நகர் நீதிமன்றம், வரும் 26ம் தேதி வரை நித்யானந்தாவை சிறையில் வைக்க உத்தரவிட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications