ஊரக வேலை உறுதி திட்டம்: தமிழகத்துக்கு ரூ.420 கோடி
டெல்லி: தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.420 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கு 75 சதவீத செலவை மத்திய அரசு தருகிறது. மீதமுள்ள 25 சதவீத தொகை மாநில அரசின் பங்காகும்.
தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி உரிய முறையில் செயல்படுத்தப்பட்ட பிறகு 2வது தவணை நிதியை மத்திய அரசு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிதியின் மூலம் 2010-11ம் நிதியாண்டில் மாநிலம் முழுவதும் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்படவுள்ளன.
பாரம்பரிய சின்னங்களை பராமரிக்க ரூ4.75 கோடி:
இந் நிலையில் தமிழகத்தில் உள்ள பாரம்பரிய சின்னங்களைப் பராமரிக்க ரூ. 4.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பராமரிக்கும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக ஆண்டுதோறும் பராமரிப்பு திட்டம் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படுகிறது. இதன்படி, தமிழகத்தில் 2009-10ம் ஆண்டில் 24 பாரம்பரிய சின்னங்களை பராமரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக ரூ. 4.75 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications