லேடீஸ்தான் சமைக்கணுமா?-ஆண்கள் சமைக்கக் 'கூடாதா?'
சென்னை: சத்துணவில் குழந்தைகளுக்கு பாதி முட்டை தான் வழங்கப்படுகிறது என்று சட்டசபையில் அதிமுக குற்றம் சாட்டியது.
சமூக நலம், சத்துணவு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்எல்ஏ தேன்மொழி,
எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தபோது குழந்தைகளை தட்டு ஏந்த வைக்கும் திட்டம் என்று திமுகவினர் கேலி பேசினார்கள். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் வாரத்துக்கு 3 முட்டைகளுடன் விரிவுப்படுத்தினார்களே தவிர இந்தத் திட்டத்தைக் கைவிட முடியவில்லை.
இப்போது சத்துணவில் பாதி முட்டைதான் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. மீதி முட்டையும், கொண்டைக் கடலையும் சமூக விரோதிகளுக்கு 'சைடு டிஷ்' ஆக சென்று விடுகிறது. இதனை அரசு தடுக்க வேண்டும்.
சத்துணவில் வழங்கப்படும் முட்டைகள் மற்றும் உருளைக் கிழங்கை வேக வைக்க அதிகமான எரிபொருள் தேவைப்படுவதாகக் கூறுகிறார்கள். எனவே, அதற்கான எரிபொருளுக்கும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
சத்துணவில் காய்கறி, தாளிதப் பொருள்கள் மற்றும் எரிபொருளுக்காக ஒரு குழந்தைக்கு 44 பைசா மட்டுமே வழங்கப்படுகிறது. விலைவாசி அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தொகையை ரூ. 2 ஆக அதிகரிக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதற்காக திருக்கோயில் அன்னதானத் திட்டத்தை திமுக அரசு விரிவுபடுத்தவில்லை. ஆதிதிராவிடர் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருப்பணி செய்ய ரூ. 25,000 வழங்கப்படுகிறது. இதனை ரூ. 50,000 ஆக அதிகரிக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் விண்ணப்பித்த அனைவருக்கும் திருமண உதவித் தொகை வழங்கப்பட்டது. ஆனால், இப்போது ஆளும் கட்சியினர் சிபாரிசு செய்யும் நபர்களுக்கு மட்டுமே திருமண உதவித் தொகை வழங்கப்படுகிறது.
அங்கன்வாடி மையங்கள் அமைக்க அரசிடம் நிதி இல்லை. ஆனால், புதிய சட்டப் பேரவைக்கு ரூ. 2 கோடியில் 'செட்டிங்' அமைக்க முடிகிறது. அந்தப் பணத்தில் 10 அங்கன்வாடி மையங்கள் கட்டியிருக்கலாம். இலவச கலர் டிவி வழங்குவது தண்டச் செலவாகும்.
ஏற்கெனவே கலர் டிவி வைத்திருப்பவர்களே இலவச டிவியை பெற்றுச் செல்கின்றனர் என்றார் தேன்மொழி.
சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்: சத்துணவு மையங்களில் எங்கும் பாதி முட்டை போடப்படவில்லை. முழு முட்டைதான் வழங்கப்படுகிறது.
அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன்: 360 கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எங்கும் நிறுத்தப்படவில்லை. கடந்த ஆண்டுகளில் ஆதிதிராவிடர் பகுதிகளில் 3,911 கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
ராமன் (காங்கிரஸ்): மதிய உணவு திட்டத்தை முதல் முதல் அறிமுகப்படுத்தியது காமராஜர்தான். இதை விரிவாக்கம் செய்ததுதான் எம்.ஜி.ஆர்.
அமரமூர்த்தி (காங்கிரஸ்): சத்துணவு மையங்களில் ஆண்களையும் பணியமர்த்த வேண்டும். விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்களில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் இல்லையா?
லதா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட ஆண்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது.
சபாநாயகர் ஆவுடையப்பன்: லேடீஸ்தான் சமைக்கணுமா?, ஆண்கள் சமைக்கக் கூடாதா என்ன?
துணை சபாநாயகர் துரைசாமி: மனைவியால் பாதிக்கப்பட்ட ஆண்களும் அதிகளவில் இருக்கிறார்கள்.
சபாநாயகர்: சப்ஜெக்ட் எங்கேயே போகுது.
அமரமூர்த்தி (காங்கிரஸ்): திருமணங்களில் ஆண்கள் தான் சமைக்கிறார்கள். மகளிர் சுய உதவிக் குழுக்கள் வந்த பிறகு வீட்டில் ஆண்கள் சமைப்பது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செய்ய வேண்டியுள்ளது.
துணை முதல்வர் ஸ்டாலின்: உறுப்பினர் அமரமூர்த்தி தனது அனுபவங்களை எல்லாம் இங்கே பகிர்ந்து கொள்கிறார்.
நிதியமைச்சர் அன்பழகன்: சத்துணவு மையங்களில் பணியமர்த்துவதில் ஆண்களா, பெண்களா என்பது பிரச்சனை அல்ல. இது குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய பணி என்பதால் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சில இடங்களில் அவர்கள் முன்வரவில்லை என்றால் மற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும்.
1 ரூபாய் அரிசியால் அன்னதானத்துக்கு ஆள் இல்லை:
ராணி வெங்கடேசன் (காங்கிரஸ்): அறநிலையத்துறை ஊழியர்களுக்கும் 6வது ஊதியக்குழு பரிந்துரைத்தது போல் ஊதியம் அளிக்கப்பட வேண்டும். அவர்களையும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
கோவில்களில் செயல்படுத்தப்படும் அன்னதான திட்டத்தில் மாறுதல்களை அரசு செய்ய வேண்டும். முதல்வர் கருணாநிகி 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்குவதால், கோவில்களுக்கு சென்று அன்னதானம் சாப்பிட ஆள் இல்லை. போலி சாமியார்களை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். மதுரை, கன்னியாகுமரி, திருச்செந்தூர் போன்ற கோவில்களுக்கு வரும் பக்தர்களை அந்தந்த கோவில்களுக்கு பஸ் நிலையத்தில் இருந்து இலவசமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
மகேந்திரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): கோவில் நிலத்தில் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரின் வாரிசுகளின் பெயருக்கு அதனை மாற்ற முடியாத நிலை உள்ளது.
அமைச்சர் பெரியகருப்பன்: கோவில் நிலத்தில் குடியிருந்தால் வாடகை கேட்கக்கூடாதா? கோவில் சொத்துக்காக கேட்பவர்கள் யாரும் இல்லை என்று நினைத்துவிட வேண்டாம். தனியார் சொத்துகளான கோவில் நிலங்களின் பராமரிப்பாளர் அரசுதான். கோவில் நிலத்தின் வாடகை வரைமுறை தொடர்பாக முதல்வர் விரைவில் நல்ல செய்தியை அறிவிப்பார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications