தமிழக சட்ட மேலவைக்கு சிறப்பு பணி அதிகாரி நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மீண்டும் உருவாக்கப்படும் தமிழ்நாடு சட்ட மேலவையின் சிறப்புப் பணி அதிகாரியாக ஜமாலுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை அமைக்கப்படுகிறது. இதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு விட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் கையெழுத்திட்டு முடித்தவுடன் சட்டமேலவை மீண்டும் அமைக்கப்படும்.
இந்நிலையில் சட்ட மேலவையின் சிறப்பு பணிகள் மற்றும் ஒற்றை வாக்குமுறையில் மேலவை உறுப்பினர்களை தேர்வு செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்பு அதிகாரியாக ஜமாலுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபை செயலக அதிகாரிகளின் ஆலோசனையுடன் இவர் செயலாற்றுவார் என அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications