திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
ஆறுமுகநேரி: திமுக அரசுக்கு தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆதரவு தரும். கூட்டணியிலும் தொடர்ந்து நீடிப்போம் என அக்கட்சியின் வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார்.
இந்திய யூனியன் மூஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் காயல்பட்டிணத்தில் நடந்தது. இதில் வேலூர் எம்பி அப்துல் ரகுமான் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
ஜூன் மாதம் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எல்லா விதமான ஓத்துழைப்பையும் தரும். சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை உடனடியாக ஏற்று சிறப்பான திட்டங்களை செயல்படுத்தும் தமிழக அரசுக்கு முஸ்லீம் லீக் தொடர்ந்து ஆதரவு வழங்கும்.
அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலிலும் தி்முக கூட்டணியில் நீடிப்போம். கருணாநிதியை தமிழக மக்கள் மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. திமுக ஆட்சி தொடர முழுமையான ஆதரவை வழங்குவோம்.
அக்டோபர் மாதம் சென்னையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் மத நல்லிணக்க மாநாடு நடத்தப்படும். அதில் சிறுபான்மை சமுதாய மக்களக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் முதல்வர் கருணாநிதிக்கு சமூக நல்லிணக்க விருது வழங்கப்படும் என்றார் அவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications