சுசீந்திரத்தில் 85 வயது மூதாட்டியின் கண்கள் தானம்
சுசீந்திரம்: சுசீந்திரத்தை சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவரின் கண்கள் தானமாக பெறப்பட்டு கண் சேமிப்பு வங்கியி்ல் சேர்க்கபபட்டது.
அறிவியல் முன்னேற்றம் கண்டு வரும் இந்த காலத்தில் அன்னதானத்தை மிஞ்சி தனது உடலையே தானமாக வழங்கி பலரது வாழ்வில் ஓளியேற்ற உதவும் உடல்தானம் சிறந்ததாக கருதப்படுகிறது. ஒருவர் இறந்த பின் வழங்கும்தான் உடல்தானம் மட்டும்தான்.
அந்த வகையில் சுசீந்திரம் கொத்தையார் திட்டதெருவை சேர்ந்த செல்லப்பன் பிள்ளை என்பவர் மனைவி விஜயம்மா என்ற மூதாட்டி இறந்த பின் தன் கண்களை தானம் செய்து மக்களி்ன் மனதில் இடம் பிடித்து விட்டார். இவருக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் பத்திரிக்கை மூலம் இவர் கண்தானத்தை பற்றி அறிந்து கொண்டு தனது கண்களை தானம் செய்வதாக உறுதி மொழி பத்திரத்தில் கையேழுத்திட்டார்.
கடந்த சில மாதங்களாக இவரது உடல் நிலை மோசமான நிலையில் இருந்த போதெல்லாம் இறந்த பின் கண்ணை தானம் செய்துவிடுமாறு தனது மகனிடம் வலியுறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அவர் இறந்ததை அடுத்து நாகர்கோவிலில் உள்ள கண் மருத்துவமனைக்கு அவரது மகன்கள் தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து விஜயம்மா இறந்த அரை மணி நேரத்தில் கண் டாக்டர்கள் சென்று அறுவை சிகி்ச்சை மூலம் கண்ணை தானமாக பெற்று கண் சேமிப்பு வங்கியில் சேர்த்தனர். இதன் மூலம் இருவருக்கு கண் பார்வை கிடைக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விஜயம்மா மகன் விக்ரமன் கூறும்போது, எனது தாய் கண் தானத்தின் முக்கியத்துவத்தை பத்திரிக்கை மூலமாகவும், தொலைகாட்சி மூலமாகவும் அறிந்துஉடனேயை தனது கண்களை தானம் செய்வதாக உறுதி மொழி பத்திரத்தில் கையேழுத்திட்டு ஆஸ்பத்திரியில் வழங்கினார். அவர் விருப்பம் போலவே இறந்த அரை மணி நேரத்தில் டாக்டர்கள் வந்து கண்ணை எடுத்து சென்றனர்.
சுசீந்திரம் பகுதியில் வயதான பெண்மணி கண்தானம் செய்வது இதுவே முதல் முறையாகும் என அவர் தெரிவித்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications