'ஆட்டம் போடும்' தங்கம் விலை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த 2 மாதங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. அட்சய திரிதியையை முன்னிட்டு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.
அந்த தினத்தி்ல் ஒரு கிராம் தங்கம் ரூ.1,696க்கு விற்றது. இதனால் நகைக் கடைகளில் இந்த தினத்தில் காணப்படும் வழக்கமான கூட்டம் இல்லை. தங்கம் விற்பனையும் சரிந்தது.
இந் நிலையில் தங்கத்தின் விலையில் நேற்று திடீரென சரிந்தது. ஒரே நாளில் பவுன் ரூ.296 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.13,464க்கு விற்கப்பட்டது.
ஆனால், இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ. 136 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 1,700க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ. 13,600க்கும் விற்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications