சிங்கள ராணுவத்திடம் சிக்கி சிதைந்த தமிழர்கள்- அம்பலப்படுத்திய சேனல் 4
ஹிட்லர் காலத்தில் யூதர்கள் சந்தித்த பேரவலத்திற்கு சற்றும் குறையாத கொடூரத்தை ஈழத் தமிழர்கள் சந்தித்துள்ளனர். இது வெளியுலகுக்கு தெரியாமல் புதைந்து போயிருந்தாலும், மேற்கத்திய மீடியாக்களால் இது அவ்வப்போது வெளியே கொண்டு வரப்பட்டு, ஈழத்தில் நடந்து முடிந்து போன ஒரு மிகப் பெரிய மனிதப் பேரவலத்தை வெளியுலகம் கண்டு அதிர வைத்து வருகிறது.
லண்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி முன்பு, பிடிபட்ட ஈழத் தமிழ் இளைஞர்களின் கை, கால்களைக் கட்டி பின்னாலிருந்து சிங்கள காடையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் பகீர் காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது மேலும் ஒரு பகீர் காட்சியை சேனல் 4 வெளியிட்டுள்ளது.
அதில் ஏராளமான தமிழர்களை ஒரு இடத்தில் கைகளை பின்புறமாக கட்டி வைத்து சித்ரவதை செய்யும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.
15 வயதுக்கும் உட்பட்ட ஒரு சிறுவனையும் இதே போல கட்டி வைத்து சித்ரவதை செய்கின்றனர்.
இன்னொரு இடத்தில் இளம்பெண்கள் சிலர் மயங்கியபடி கிடக்கின்றனர். அவர்களை ராணுவத்தினர் சித்ரவதை செய்ததில் மயங்கி கிடப்பது போல தெரிகிறது.
இவர்கள் அனைவரையும் சித்ரவதைக்கு பிறகு சிங்கள ராணுவத்தினர் கொன்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இந்த காட்சிகள் அனைத்தும் ராணுவ வீரர் ஒருவர் செல்போன் மூலம் எடுத்தவை என்று சேனல் 4 கூறியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications