இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ராணுவ விமானத்தில் அனுப்பப்பட்ட 40,000 குளுக்கோஸ் பாட்டில்கள்

Subscribe to Oneindia Tamil

Lanka Airforce Plane
கொழும்பு: இலங்கை அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருள்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.​ இதனால் இந்தியாவிலிருந்து மருந்து,​​ மாத்திரைகளை உடனடியாக இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

இலங்கைக்கு மருந்து,​​ மாத்திரைகளை சப்ளை செய்து வந்த 6 இந்திய நிறுவனங்களின் சப்ளையை அந்நாட்டு அரசு சென்ற ஆண்டு திடீரென நிறுத்தியது.​ தரமற்ற மருந்துகளை வழங்கியதால் சப்ளை நிறுத்தப்படுவதாகக் கூறியது.

இந்நிலையில் இந்த நிறுவனங்களிடம் இருந்து மீண்டும் மருந்துப் பொருள்களை இலங்கை அரசு பெறலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் தரமான மருந்துப் பொருள்களை வாங்குவதில் எவ்விதத்திலும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.​ ஒரு மருந்துக்கு இணையான நிவாரண சக்தியுடைய பிற மருந்தைக்கூட மாற்றாக கொள்முதல் செய்யமாட்டோம் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மைத்ரிபாலா சிறிசேனை கூறியுள்ளார்.

இலங்கையில் கடந்த வாரம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கடும் குளுக்கோஸ் தட்டுப்பாடு நிலவியது.​ இதையடுத்து அந்நாட்டு விமானப் படை விமானம் மூலம் இந்தியாவில் இருந்து 40,000 குளுக்கோஸ் பாட்டில்கள் அவசரமாக இறக்குமதி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+