இந்திய ஏற்றுமதி 36 சதவீதம் அதிகரிப்பு
டெல்லி: இந்த நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், நாட்டின் ஏற்றுமதி 36.2 சதவீதம் அதிகரித்து ரூ.76,050 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத பின்னடைவால் அந்த ஆண்டின் அக்டோபர் மாதத்திலிருந்து தொடர்ந்து 13 மாதங்களாக நாட்டின் ஏற்றுமதி சரிவடைந்து வந்தது.
சென்ற ஏப்ரல் மாதத்தில், ஏற்றுமதி 30 சதவீதம் குறைந்து ரூ.55,800 கோடியாக சரிவடைந்தது.
இந்நிலையில், மத்திய அரசு வழங்கிய ஊக்குவிப்பு சலுகைகளால், சென்ற 2009ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2010-11ம் நிதியாண்டில் ரூ.9 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் ஜவுளி, நவரத்தினங்கள் மற்றும் கடல் உணவு பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் அமோக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், அந்நாட்டிலிருந்து அதிக அளவில் ஆர்டர்கள் கிடைத்துள்ளதால் கைவினைப் பொருள்கள் ஏற்றுமதியும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் கவரிங் நகைகள், மர கைவினைப் பொருட்கள் ஆகியவையும் அடங்கும்.
அதே போல கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications