சத்யம் ஊழல் வழக்கு: 90 சதவீத விசாரணை முடிவடைந்தது - சிபிஐ
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன ஊழல் வழக்கில் 90 சதவீத விசாரணை முடிவடைந்து விட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ டிஐஜி லட்சுமிநாராயணா ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சத்யம் வழக்கில் 90 சதவீத விசாரணைகளை முடித்து விட்டோம். தற்போது நிதியை வேறு பக்கம் திருப்பி விட்டது தொடர்பான மோசடி குறித்து விசாரித்து வருகிறோம்.
இந்த வழக்கில் கிட்டத்தட்ட பெரும்பாலான விசாரணை முடிந்து விட்டதாக கூறலாம்.
அடிப்படை மோசடிகள், கணக்கில் முறைகேடுகள், நம்பிக்கை துரோகம் உள்ளிட்டவை குறித்த விசாரணைகள் முடிவடைந்து விட்டன.
நாங்கள் சேகரித்துள்ள ஆதாரங்களை சட்டப்பூர்வமாக கோர்ட் முன்பு நிரூபிக்க வேண்டிய கட்டத்தை எட்டியுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications