இந்திய ஹாக்கி சம்மேளனத்தை கலைத்தது செல்லாது - டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி: இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் செயலாளர் ஜோதிகுமரன், வீரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்கிய சம்பவத்தைத் தொடர்ந்து அதன் அங்கீகாரத்தை ரத்து செய்து, கலைத்தது செல்லாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் கேபிஎஸ் கில்லைத் தலைவராகக் கொண்ட இந்திய ஹாக்கி சம்மேளனத்திற்கு மீண்டும் உயிர் வந்துள்ளது. கில்லுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.
கடந்த 2008ம் ஆண்டு ஹாக்கி சம்மேளன செயலாளர் ஜோதிகுமரன் வீரர் ஒருவரை இந்திய அணியில் சேர்ப்பதற்காக பணம் பெற்றதாக ரகசிய வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து விசாரணை நடத்திய மத்திய விளையாட்டுத்துறை, 2008ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்து அதை கலைத்து உத்தரவிட்டது. மேலும், அடுத்த சில நாட்களில் ஹாக்கி இந்தியா என்ற புதிய அமைப்பையும் உருவாக்கி உத்தரவிட்டது.
அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கேபிஎஸ் கில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர் நேற்று மத்திய அரசின் நடவடிக்கை செல்லாது என்று கூறி தீர்ப்பளித்தார். அவர் கூறுகையில், இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் அங்கீகாரத்தை திரும்பப் பெறும் மத்திய அரசு மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முடிவு செல்லாது.
இந்த நடவடிக்கைக்காக மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகமும், இந்திய ஒலிம்பிக் சங்கமும் தலா ரூ. 10,000 அபராதம் செலுத்த வேண்டும்.
விளையாட்டு அமைப்புகள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்பட வேண்டும். அதன் நடவடிக்கைகளில் அரசு தலையிடுவது அவற்றின் செயல்பாட்டை பாதித்துவிடும்.
விளையாட்டு அமைப்புகளின் செயல்பாடுகளில் தலையிடாமல் அவற்றைக் கண்காணிக்கும் பணியை மட்டும் அரசு மேற்கொள்ளளாம். சுதந்திரமான முறையில், தன்னாட்சியுடன் கூடியதாக, ஜனநாயக ரீதியாக விளையாட்டு அமைப்புகள் செயல்பட அனுமதிப்பது அரசின் கடமையாகும் என்றார்.
தீர்ப்பு குறித்து கேபிஎஸ் கில் கூறுகையில், நான்தான் எப்போதுமே ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக இருந்து வருகிறேன். சுயநலத்துடன் கூடிய சிலரால்தான் இந்த சம்மேளனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. தற்போது அதை ரத்து செய்து விட்டது உயர்நீதிமன்றம்.
முன்பு போலவே அனைவருடனும் ஒருங்கிணைந்து பணியாற்ற நான் ஆர்வமாக உள்ளேன். எங்களைக் கலைத்து விட்டு ஹாக்கி இந்தியாவை மத்திய அரசு உருவாக்கியபோது அவர்கள் என்னிடம் உதவி கோரி வந்தனர். அப்போது கூட நான் எந்தவிதத் தயக்கமும் காட்டாமல் அவர்களுக்கு பல்வேறு யோசனைகளைக் கூறினேன்.
ஆனால் அரசுக்குத்தான் நாம் தான் பெரியவர் என்ற ஈகோ. எல்லாமே எங்களுக்குத் தெரியும் என்பது அவர்களது எண்ணம். இப்போதாவது உண்மையைப் புரிந்து கொண்டு இந்திய ஹாக்கி சம்மேளனத்துடன் ஒத்துழைத்துச் செயல்பட அரசு முன்வர வேண்டும்.
ஹாக்கி இந்தியா அமைப்பு முற்றிலும் சட்டவிரோதமான ஒன்றாகும். பத்து நாட்களுக்குள் இந்த அமைப்புக்கு மத்திய அரசும், இந்திய ஒலிம்பிக் சங்கமும் அனுமதி அளித்தன. இது அப்பட்டமான விதி மீறலாகும். ஒரு அமைப்புக்கு அங்கீகாரம் வழங்க ஏகப்பட்ட விதிமுறைகளை அடுக்கும் அரசு, தான் விதித்த விதிமுறைகளையே கடைப்பிடிக்காதது கேலிக்கூத்தாகும் என்றார் கில்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications