மங்களூர் விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் பரிதாப பலி
மங்களூர்: மங்களூர் விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் பலியாகியுள்ள சோகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலையில் மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி ஓடி வெடித்துச் சிதறியது. இதில் 159 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் சமீர் ஷேக் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் பலியாகியுள்ள தகவல் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீரின் பாட்டி மரணமடைந்து விட்டார். இதையடுத்து அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது மனைவி, 2 குழந்தைகள், உறவினர்கள் என 16 பேரை இந்த விமானத்தில் மங்களூருக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் அத்தனை பேரும் விமானவிபத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 24 வயதான சமீர் சவூதி அரேபியாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கு தொழிலதிபராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீர் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் வரவில்லை. மாறாக சவூதியலிருந்து மும்பைக்கு வந்து அங்கிருந்து மங்களூர் வரத் திட்டமிட்டிருந்தார். இதனால் அவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
விபத்து குறித்து கேள்விப்பட்டு பெரும் அதிர்ச்சி அடைந்த சமீர் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சவூதியிலிருந்து நேற்று நான் மும்பை வந்தேன். ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் மங்களூர் செல்லத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் இணைப்பு விமானம் கிடைக்கவில்லை.
இந்த விபத்தில் எனது தாய்மாமா, மனைவி, இரு குழந்தைகள், 12 தூரத்து உறவினர்களை இழந்துள்ளேன் என்றார் சோகத்துடன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications