நீட் ரத்து.. அதுதான் எங்கள் நிலைப்பாடு.. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுங்க.. அமைச்சர் அருண்ராஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதே நிரந்தர தீர்வு என்று கூறிய அருண்ராஜ், மருத்துவக் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வை நடத்தும் அதிகாரத்தை மாநிலங்களுக்கே மத்திய அரசு கொடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. டெல்லியில் மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

NEET Exam

இதனால் மாணவர்களின் போராட்டத்திற்கு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தமிழ்நாட்டிலும் எஸ்எஃப்ஐ மற்றும் டைஃபி மாணவர்கள் அமைப்புகள், சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டமாக கைது செய்வது தொடர்கதையாக இருக்கிறது.

டெல்லியில் நீட் தேர்வை முறையாக நடத்திட கோரி போராட்டம் நடந்தாலும், தமிழ்நாட்டில் மீண்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதனிடையே இந்த மாணவர்கள் போராட்டம் தொடர்பாக தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ள தவெக நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நீட் தேர்வு வேண்டாம் என்பதே மக்களின் நிலைப்பாடு.. அதுதான் தவெகவின் நிலைப்பாடும். நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. ஏற்கனவே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். மாநில உரிமைகளுக்கு எதிரானது. மீண்டும் ஒருமுறை தீர்மானம் கொண்டு வருகிறோம்.

நீட் விலக்குக்காக நீதிமன்றத்திலும் தொடர்ச்சியாக போராடுவோம். அதேபோல் அறவழிப் போராட்டத்தில் நாங்கள் எதிராக இருக்க மாட்டோம். கல்வி மற்றும் மருத்துவத்தை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதே நிரந்தர தீர்வாகும். மாநில அரசு உருவாக்கிய மருத்துவக் கல்லூரிக்கும் நாங்களே நுழைவுத் தேர்வை நடத்துவோம் என்று மத்திய அரசு சொல்ல வேண்டிய தேவையே இல்லை.

நாடு முழுவதும் நீட் தேர்வை நடத்துவதால், எங்கோ ஒரு இடத்தில் வினாத்தாள் கசிவதற்கான சூழல் உருவாகிறது. இதனை யார் வந்தாலும், வினாத்தாள் கசிய வாய்ப்புகள் உள்ளது. இதனால் மாநில அரசே நுழைவுத் தேர்வை நடத்தக் கூடிய அதிகாரத்தை கொடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை எப்படி மாநில அதிகாரத்தில் கொடுத்துவிட்டார்களோ, அதேபோல் கல்வியையும் கொடுக்கலாம். மாநில அரசுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+