டெல்லி போலீஸே பரவாயில்ல போல! மாணவர்களை அடித்து இழுத்துச் சென்ற காவல்துறை! சென்னையில் ஷாக்! வீடியோ
சென்னை: நீட் தேர்வை கண்டித்து போராடிய மாணவர்களை திருவொற்றியூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களை போலீசார் அடித்து இழுத்து கைது செய்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும், மாணவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, சென்னை திருவொற்றியூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பூன்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நீட் போராட்டம்
தொடர்ந்து மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து நாடு முழுவதும் இந்த போராட்டம் தீவிரமாக பரவி வருகிறது. இதற்கிடையே சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைக் மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மாணவர்கள் போராட்டம்
மேலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், போராட்டத்தில் குதித்துள்ளன. சென்னை எழும்பூர் எல்ஜி கார்டன் சாலையில் பேரணி நடைபெற்ற நிலையில் பங்கேற்ற மாணவர்களை போலீசார் தடுத்ததால் அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதேபோல கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் வெடித்துள்ளது.
திருவொற்றியூர் கல்லூரி
அந்த வகையில், மேலும் அனுமதியின்றி போராடியதாக மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தும் வருகின்றனர். இந்த நிலையில் தான் திருவொற்றியூர் பகுதியில் நடந்த சம்பவம் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்தும் அமைதியாக இருக்கும் தமிழக அரசை கண்டித்தும் திருவொற்றியூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
போலீஸ் தாக்குதல்
தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி கடும் கண்டனத்தை பெற்று வருகிறது. மாணவிகளை போலீசார் அடித்து கொடூரமாக இழுத்துச் செல்லும் காட்சிகளுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தாக்கியதை கண்டித்தும் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறி திருவொற்றியூர் காவல் நிலையத்தை முற்றிவிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டங்களால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவிவரும் நிலையில் பாதுகாப்பு கருதி போல் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
