இயற்கையை அழிப்பது தற்கொலைக்கு சமம் - குன்றக்குடி அடிகளார்

தமிழக அறிவியல் பேரவையின் 10வது கருத்தரங்க துவக்கவிழா நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடந்தது. துணைவேந்தர் சபாபதி மோகன் தலைமை வகித்தார்.
கருத்தரங்க ஆய்வுக்கட்டுரையை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வெளியிட்டு பேசியதாவது:
இயற்கைதான் அறிவியல். அறிவியல் தமிழ் அவசியமாகிறது. காரைக்குடியில் தொடங்கிய தமிழ் அறிவியல் பேரவை இன்று நெல்லை வந்திருக்கிறது. அறிவியலும், ஆன்மீகமும் ஆக்க பாதையில் பயணித்தால் சாதிக்க முடியாதவை இல்லை.
இயற்கையை தழுவிய வாழ்க்கையில் இருந்து நாம் விலகி விட்டோம். இயற்கையை நாம் அழிப்பது மனிதன் தனக்கு தானே தற்கொலை செய்வதற்கு சமமாகும். பூமிபந்து வெப்பமடைய கூடாது என்றார்.
கருத்தரங்கில வேளாண்மை துறை இணை செயலாளர் வாசுகி பேசுகையில் பூமி வெப்பமயமாதல் குறித்து கருத்தரங்கம் நடத்தப்பட்டபோதிலு்ம், உலக நாடுகளிடம் ஓருமித்த கருத்து உருவாகவில்லை. சில நாடுகள் புவி வெப்பமாகவில்லை என்றும், பல நாடுகள் இதை நம்பவில்லை என்றும் கூறுகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் பனி அதிகமாக உள்ளது. தென் பகுதியில் வறட்சி, வெப்பம் அதிகமாக இருக்கிறது. கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் மிகுந்த மாற்றங்கள். அதை தொடர்ந்து 50 ஆண்டுகளில் பல்கி பெருகி விட்டன. மறு சுழற்சி செய்யப்படாத பாலீதின் பைகள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதை கட்டுபடுத்த பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications