ரெளடிகளுக்குள் மோதல்-ஒருவன் வெட்டிக் கொலை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே நள்ளிரவில் பைக்கில் சென்று கொண்டிருந்த ரெளடி வெட்டிக் கொல்லப்பட்டான்.
ரெளடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்துள்ளது.
புதுச்சேரிகுயிலாப்பாளையத்தை சேர்ந்த மாரி, இவனது தம்பி ஆறுமுகம் (30) இருவருமே ரெளடிகள். நேற்றிரவு ஆறுமுகம் மயிலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
தழுதாலி என்ற இடத்தில் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பைக் மீது மோதி, வழிமறித்து நிறுத்தியது. இதையடுத்து ஆறுமுகம் பைக்கில் இருந்து இறங்கி அருகில் இருந்த வயல் வெளிக்குள் புகுந்து ஓடினார்.
ஆனால், காரில் வந்த கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் உயிரிழந்தார்.
கொலைக் கும்பல் தப்பிவிட்டது. ரெளடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தான் இந்தக் கொலை நடத்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் காரணமாக தழுதாலி பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications