ஐ.ஐ.டி. நுழைவு தேர்வு-சென்னை மண்டலத்தில் 2,619 பேர் தேர்ச்சி
சென்னை: ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் ஆந்திர மாணவர் அனுமுல்லா ஜிதேந்தர் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்தள்ளார்.
சென்னை, மும்பை, டெல்லி உள்பட இந்தியா முழுவதும் 15 இடங்களில் உள்ள ஐ.ஐ.டிக்களில் உள்ள 9,500 பி.இ., பி.டெக். இடங்களில் சேர கடந்த ஏப்ரல் 11ம் தேதி நுழைவுத் தேர்வு நடந்தது.
மேலும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், தான்பாத் இந்தியன் ஸ்கூல் ஆப் மைன் கல்லூரி உள்பட ஒருசில நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
நாடு முழுவதும் 4.5 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்ற IIT-JEE நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின.
இதில் 13,104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 15,000 பேர் தேர்வு எழுதினர். இதில் 2,619 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால, சென்னையைச் சேர்ந்த சேர்ந்த யாரும் 'டாப்-100' இடத்தைப் பிடிக்கவில்லை.
ஆந்திராவைச் சேர்ந்த அனுமுல்லா ஜிதேந்தர் என்ற மாணவர் தான் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்றோரில் 2,357 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், 1,773 பேர் தாழ்த்தப்பட்டோர் சமூகத்தையும், 517 பேர் பழங்குடியின வகுப்பையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வை எழுதியவர்களில் மும்பை மண்டலத்தில் அதிகபட்சமாக 3,145 பேரும், சென்னை மண்டலத்தில் 2,619 பேரும், டெல்லி மண்டலத்தில் 2,264 பேரும், கராக்பூர் மண்டலத்தில் 1,481 பேரும், கான்பூர் மண்டலத்தில் 1,341 பேரும், ரூர்கி மண்டலத்தில் 1,305 பேரும், குவஹாத்தி மண்டலத்தில் 521 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரியை தேர்வு செய்வதற்கான கவுன்சிலிங் அடுத்த மாதம் 2வது வாரத்தில் நடைபெறுகிறது.
தேர்வு முடிவுகளைக் காண:
என்ஜினீயரிங் சேர முதல் நாளில் 1,600 பேர் விண்ணப்பம்:
இந்நிலையில் தமிழக பொறியியல் கல்லூரிகளில் சேர சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
வரும் 29ம் தேதி வரை விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க 31ம் தேதி கடைசி நாளாகும்.
இதற்கிடையே முதல்நாளான நேற்று மட்டும் 1,600 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications