தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க 46 லட்சம் பேர் தகுதி
சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ந்த புதிதாக 46 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் நடைபெற்ற வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் கடந்த 26ம் தேதி, வீடியோ கான்பரன்சிங் மூலம், கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், களசரிபார்ப்புப் பணியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இந்த சரிபார்ப்பு நடவடிக்கையின் மூலமாக, வாக்காளர் பட்டியலில் 46 லட்சத்து 7 ஆயிரம் பெயர்கள் சேர்க்கப்பட தகுதியுள்ளனவாக கண்டறியப்பட்டன. இவ்வாறு கண்டறியப்பட்டவர்களில், 40 லட்சத்து 8 ஆயிரம் பேர், தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கோரி மனு (படிவம்-6) அளித்துள்ளார்கள்.
மீதமுள்ள சுமார் 6 லட்சம் பேர் மனுக்களை தரவில்லை. அந்த 6 லட்சம் பேரிடமிருந்து, ஆதார ஆவணம் (ரேஷன் கார்டு போன்ற) மற்றும் புகைப்படம் போன்றவற்றுடன் படிவம்-6 மனுக்களையும் சம்பந்தப்பட்ட தேர்தல் பதிவு அதிகாரிகள் ஜுன் 5ம் தேதிக்குள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, வாக்காளர் பட்டியலில் 9 லட்சத்து 2 ஆயிரம் பேரின் விவரங்களில் சில திருத்தங்களை செய்ய வேண்டியுள்ளதும் கண்டறியப்பட்டது. அவர்களில், உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி, 7 லட்சத்து 37 ஆயிரம் பேர் மனு (படிவம்-8) செய்துள்ளார்கள். இதிலும், விடுபட்டவர்களிடமிருந்து உரிய படிவங்களை அதிகாரிகள் பெறவேண்டும்.
சமீபத்தில், பெங்களூரி்ல் தென் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாடு நடைபெற்றது. அதில், வரும் ஜுலை மாதத்தில், நாடு முழுவதிலும் 2010ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, அதற்கு முந்தைய (களசரிபார்ப்புப் பணி போன்ற) பணிகளில் எவ்வித குறைபாடும் இருக்கக்கூடாது' என்று இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது.
அதன் அடிப்படையிலேயே கடந்த 26ம்ந் தேதி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன என்று கூறியுள்ளார் நரேஷ் குப்தா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications