திமுகவில் இணையும் முன்னாள் அதிமுக அமைச்சர் சின்னசாமி?-முதல்வருடன் முத்துசாமி சந்திப்பு

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முத்துசாமி திமுகவில் இணைப்போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நேற்று முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசியதாகத் தெரிகிறது.
ஆனால், அதுகுறித்து அதிகாரபூர்வமாக தகவல் ஏதும் வெளியிடவில்லை.
இந் நிலையில் கரூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் குடிநீர் வடிகால் வாரிய தலைவர், முன்னாள் அதிமுக கரூர் மாவட்டச் செயலாளர், முன்னாள் தமிழக தொழில் துறை அமைச்சர், முன்னாள் கரூர் எம்பி , அதிமுக கழக அமைப்புச் செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்த கரூர் சின்னசாமிக்கு, தற்போது எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைத் தலைவர் என்ற டம்மி பதவியைத் தான் தந்துள்ளது அதிமுக தலைமை.
வயதிலும், அரசியல் அனுபவத்திலும் இவரைவிட ஜூனியரான செந்தில் பாலாஜிக்கு கரூர் சட்டமன்ற உறுப்பினர், கரூர் மாவட்டச் செயலாளர் என முக்கிய பதவிகளை வழங்கினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
கடந்தமுறை மக்களவைத் தேர்தலில் கரூரில் சின்னசாமிக்கு பதில் தர்மபுரியில் இருந்து தம்பித்துரையை கொண்டு வந்து நிறுத்தினார்.
இதனால் வெறுத்துப் போயுள்ள சின்னச்சாமி திமுகவில் இணைப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருடன் தொட்டியம் முன்னாள் எம்.எல்.ஏ சிவபதி, முசிறி முன்னாள் எம்.எல்.ஏ பிரின்ஸ் தங்கவேல், மற்றெரு முன்னாள் எம்.எல்.ஏ இரத்தினவேல் ஆகியோரும் திமுகவுக்கு தாவுவர் என்று கூறப்படுகிறது.
முதல்வர் கருணாநிதி பிறந்த தினமான ஜூன் 3ம் தேதி இவர்கள் திமுகவில் இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications