ஜெட் ஏர்வேஸ்-இண்டிகோ விமானங்கள் மோதல் தவிர்ப்பு!

மும்பை: மும்பை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் உயிர் தப்பினர்.
மங்களூரில் கடந்த 22ம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரை இறங்குகையில் வெடித்து சிதறி 158 பேர் உயிரிழந்தனர். இந் நிலையில் மும்பையில் இந்த விபத்து நடக்க இருந்தது.
நேற்று முன்தினம் இரவு 9.04 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ விமானம் புறப்படத் தயாரானது.
ரன்-வேவுக்குள் நுழையும் முன்புள்ள டாக்சி-வேக்குள் அந்த விமானம் செல்ல தரைக் கட்டுப்பாட்டு மையம் உத்தரவிட்டது. ஆனால், இந்த விமானத்தின் விமானிகள் அதை ரன்வேக்குள் கொண்டு சென்றனர்.
அப்போது கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கு வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் அதே ரன்வேயில் தரை இறங்கத் தயாரானது.
இந்தத் தவறைப் பார்த்துவிட்ட தரைக்காட்டுப்பாட்டு மையம், ஜெட் ஏர்வேஸ் விமானத்தை தரையிறங்க அனுமதிக்காமல் வானில் ஒரு சுற்று சுற்றிவிட்டு வருமாறு உத்தரவிட்டனர்.
இதையடுத்து தரையிறங்க இருந்த அந்த விமானம் அதைத் தவி்ர்த்துவிட்டது. இதன்மூலம் அந்த விமானமும் இண்டிகோ விமானமும் ரனேவேயில் நேருக்கு நேர் மோதிக் கொள்ள இருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications