ரயில்வே ஊழியரை கடத்திச் சென்று பயன்படுத்தி ரயிலை கவிழ்த்த நக்ஸல்கள்!

மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா மாநிலங்களின் எல்லையில் உள்ள லோதாசுளி என்ற பகுதியில் இயங்கும் நகஸல் அமைப்பு தான் இந்தச் செயலை செய்துள்ளது.
'போலீஸ் வன்முறைக்கு எதிராக மக்கள் கமிட்டி' என்ற நக்ஸல் அமைப்புடன் இணைந்த இந்த இயக்கத்தை உமாகந்தா மகதோ (40), பாபி மகதோ (20) ஆகியோர் தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர்.
இவர்கள் நக்ஸல் தலைமை அமைப்பான மக்கள் கமிட்டியின் உத்தரவுகளை பல நேரங்களில் மீறுவதும், தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துவதும் வழக்கம் என்று தெரிகிறது.
இந் நிலையில் உமாகந்த மகதோ, பாபி மகதோ ஆகியோர் உள்ளூர் தொண்டர்கள் சிலருடன் சேர்ந்து இந்த ரயிலை கவிழ்த்துள்ளனர் என்பது மேற்கு வங்க உளவுப் பிரிவினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாவோயிஸ்ட் தலைமைக்குத் தெரிவிக்காமல் தன்னிச்சையாக இவர்களே நாசவேலையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக அந்த பகுதி ரயில்வே லைன்மேன் தயாராம் மகதோ என்பவரையும் பயன்படுத்தி உள்ளனர். சம்பவத்தன்று தயாராம் மகதோ இரவு 9.30 மணியளவில் தனது வீட்டில் இருந்தார். அப்போது உமா கந்தமகதோ, பாபி மகதோ மற்றும் சிலர் ஆயுதங்களுடன் அவரது வீட்டுக்கு வந்து அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுள்ளனர்.
இந்த விஷயத்தை வெளியே சொன்னால் குடும்பத்தினர் அனைவரையும் கொன்று விடுவோம் மிரட்டியுள்ளனர்.
பின்னர் தயாராம் மகதோவை ரயில் தண்டவாளத்துக்கு அழைத்து சென்று தண்டவாளத்தி்ன் கிளிப்பை அகற்றுமாறு கூறியுள்ளனர். அதை அவர் அகற்றியவுடன் தண்டவாளத்தின் ஒரு பகுதியை நக்ஸல்கள் நீக்கியுள்ளனர்.
அப்போது மணி நள்ளிரவு 1 மணி. அடுத்த 15 நிமிடத்தில் அந்த வழியாக மும்பை செல்லும் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் அந்த வழியாக வரும் என்பதை அறிந்த, அந்த ரயிலைக் குறி வைத்தே இந்த நாச வேலையை நக்ஸல்கள் செய்துள்ளனர்.
பின்னர் அவர்கள் அந்த இடத்திலேயே காத்திருந்து ரயில் கவிழ்கிறதா என்பதை நேரில் பார்த்துள்ளனர். அந்த இடத்துக்கு வந்த ரயில் நீக்கப்பட்ட தண்டவாளத்தை விட்டு விலகி ஓடி பயங்கர சத்தததுடன் கவிழ்ந்தது. அதன் பெட்டிகள் பக்கத்து தண்டவாளத்தில் விழுந்தன.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் தண்டவாளத்தில் கிடந்த பயணிகள் ரயில் பெட்டிகள் மீது மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்தி, மேலும் பல உயிர்களை காவு வாங்கியது.
இந்தத் தகவல்களை மேற்கு வங்க உளவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ரயில்வே லைன்மேன் தயாராம் மகதோ கூறியுள்ளார்.
உமாகந்தா மகதோ, பாபி மகதோ மற்றும் சதிவேலைகளில் ஈடுபட்ட அனைவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடித்தால் சதி பின்னணி குறித்து முழு விவரமும் தெரிய வரும்.
இருப்பினும் இவர்களது அமைப்பைச் சேர்ந்த இருவரை மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர்.
பலி எண்ணிக்கை 141 ஆக உயர்ந்தது:
இந் நிலையில் இந்த ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.
பயணிகள் ரயில் மீது மோதிய சரக்கு ரயிலின் என்ஜினுக்கு அடியில் இருந்தும், மற்ற பெட்டிகளில் இருந்தும் மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், நேற்று பிற்பகலில் இந்தப் பகுதியில் 80 கி.மீட்டர் வேகத்தில் புயல் காற்றுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. இதனால் மீட்பு பணியில் தடங்கல் ஏற்பட்டது. ஆனாலும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
இன்றைக்குள் மீட்பு பணி முடியும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், சரக்கு ரெயிலின் என்ஜினும், எஸ்-5, எஸ்-6 பெட்டிகளும் மோதிய வேகத்தில் ஒன்றோடு ஒன்று சிக்கிக் கிடக்கின்றன. அவற்றை தனித்தனியாக பிரிக்க இன்னும் தாமதம் ஆகலாம். இதிலும் சில உடல்கள் கிடக்கலாம் என அஞ்சப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications