இலங்கையில் 30 ஆண்டுகளுக்குப் பின் சென்சஸ்!
கொழும்பு: இலங்கையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இலங்கையில் கடைசியாக கடந்த 1981ம் ஆண்டு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது.
எனவே, அங்கு 30 ஆண்டுகளாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. தற்போது போர் முடிவுக்கு வந்து விட்டது.
எனவே, அடுத்த ஆண்டு (2011) மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வடக்கு மாகாணத்தில் 25 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குகள் பதிவாகின.
இதன் மூலம் பெரும்பாலான மக்கள் அங்கிருந்து வேறு பகுதிக்கு குடிபெயர்ந்து இருக்கலாம் என இலங்கை அரசு கருதுகிறது. தற்போது கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் இலங்கையின் உண்மையான மக்கள் தொகை, அதில் தமிழர்கள் எண்ணிக்கை போன்றவை தெரிய வரும்.












Click it and Unblock the Notifications