அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள்: மனோஜ் பாண்டியன், கே.வி.ராமலிங்கம்!

அதிமுக சார்பில் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூடி முடிவு செய்வது தான் இது நாள் வரை வழக்கத்தில் இருந்து வந்தது. அதன்படி ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் இரண்டு அதிமுக வேட்பாளர்களை முடிவு செய்ய அக் கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
அதில் ராமலிங்கமும், பாண்டியனும் இறுதி செய்யப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர் முத்துசாமி திமுகவில் சேர முடிவெடுத்துள்ளதால், ஈரோடு பகுதியில் அதிமுகவின் செல்வாக்கை நிலைநிறுத்த அப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு அதிமுக சீட் தரலாம், அந்த வகையில் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் ராமலிங்கத்துக்கு இந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று நேற்றே நாம் தெவித்திருந்தோம் என்து குறிப்பிடத்தக்கது.
அதே போல மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டதையும் தெரிவித்திருந்தோம்.
எதிர்பார்க்கவே இல்லை-அதிமுக வேட்பாளர்:
எனக்கு ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. எனவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக ஈரோடு மாநகர அதிமுக செயலாளரான கே.வி.ராமலிங்கம் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இது எனது உழைப்புக்கும், கட்சியில் கொண்ட விசுவாசத்துக்கும் கிடைத்த பரிசு. சற்றும் எதிர்பாராத போது கிடைத்துள்ளதால் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறேன்.
முத்துசாமி திமுகவில் சேர்ருவதால்தான் எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தவறு என்றார்.
திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்:
இந் நிலையி்ல ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் டி.எம்.செல்வகணபதி, கே.பி.ராமலிங்கம், ச.தங்கவேலு ஆகியோர் இன்று மனு தாக்கல் செய்தனர்.
தமிழக சட்டமன்ற செயலாளரும், ராஜ்யசபா தேர்தல் அதிகாரியுமான செல்வராஜிடம் அவர்கள் மனுக்களை தாக்கல் செய்தனர்.
அப்போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஆகியோர் உடனிருந்தனர்.
காங்கிரஸ் வேட்பாளர் யார்?:
காங்கிரஸ் கட்சி இன்று வரை தனது வேட்பாளரை அறிவிக்காமல் மெளனம் காத்து வருகிறது. இப்போதே அறிவித்தால் கோஷ்டிகளுக்குள் அடிதடியாகிவிடும் என்பதால், வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளில் தான் வேட்பாளரை அந்தக் கட்சி அறிவிக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications