ஜெ. 4ம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் வருகை - நிர்வாகிகளுடன் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா 4ம் தேதி அதிமுக தலைமைக் கழகத்திற்கு வருகிறார். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
4 ம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு தலைமை கழகம் வருகிறார். அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள், பாசறை நிர்வாகிகள், வெளி மாநில நிர்வாகிகள் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
மாற்று கட்சிகளில் இருந்து நிறைய பேர் அ.தி.மு.க.வில் சேரும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறதாம். அவர்கள் மத்தியில் ஜெயலலிதா பேச உள்ளாராம்.
ஜெயலலிதா தலைமை கழகம் வருவதையொட்டி அவரை வழக்கம் போல மேள, தாளத்துடன் வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications