நாட்டின் ஏற்றுமதி 36 சதவீதம் உயர்வு

Subscribe to Oneindia Tamil

Shipping Containers
டெல்லி: நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து 6வது மாதமாக வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்த ஏற்றுமதி 36 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 1,688 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி நடைபெற்றதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மொத்த ஏற்றுமதி 30 சதவீதம் குறைந்தது. அப்போது ஏற்றுமதி வருமானம் 1,240 கோடி டாலர் மட்டுமே.

இதேபோல இறக்குமதியும் 43.3 சதவீதம் அதிகரித்து 2,730 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நாட்டின் இறக்குமதி 1,905 கோடி டாலராக இருந்தது.

ஏற்றுமதி, இறக்குமதி இடையிலான பற்றாக்குறை 1,040 கோடி டாலராகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் பற்றாக்குறை 670 கோடி டாலராக இருந்தது.

எண்ணெய் இறக்குமதி 808 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் இது 474 கோடி டாலராக இருந்தது.

2009-10ம் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 4.7 சதவீதம் சரிந்தது. சர்வதேச தேக்க நிலை காரணமாக இந்த சரிவு ஏற்பட்டது. இந்த ஆண்டு ஏற்றுமதி மூலம் 15 சதவீத வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+