ஹிலாரி-கிருஷ்ணா சந்திப்பு: மரபை ஒதுக்கும் ஒபாமா!

அப்போது பாகிஸ்தானின் தீவிரவாத விவகாரம், தலிபான்கள்-ஆப்கானிஸ்தான் பிரச்சனை, இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது உள்பட பல்வேறு விஷயங்கள் விவாதி்க்கப்படவுள்ளன.
அமெரிக்க அதிபர் ஒபாமாவை கிருஷ்ணா சந்திக்கும் திட்டம் ஏதும் வகுக்கப்படவில்லை. ஆனாலும, வெள்ளை மாளிகையில் ஹிலாரியும் கிருஷ்ணாவும் சந்தித்துப் பேசும்போது ஹிலாரியின் அலுவலகத்துக்கு ஒபாமா வரவுள்ளார்.
இதன்மூலம் அவரும் அதிகாரப்பூர்வமில்லை வகையில் கிருஷ்ணாவுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசவுள்ளார். மிகவும் நட்பான நாடுகளுடன் மட்டுமே அமெரிக்க அதிபர்கள், சம்பிரதாயங்களை எல்லாம் தவிர்த்துவிட்டு இதுபோன்ற சந்திப்புகளை மேற்கொள்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிருஷ்ணாவுக்கு ஹிலாரி அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் ஒபாமா கலந்து கொள்வுள்ளார். இதில் ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்க், நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
கிருஷ்ணாவுடன் அமெரிக்கா சென்றுள்ள மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில்சிபல், நேற்று ஹிலாரியை சந்தி்த்து கல்வித் திட்டங்களின் இரு நாடுகள் ஒத்துழைப்பது குறித்து விவாதித்தார்.
திட்டக்குழுத் துணைத் தலைவர் அலுவாலியா, வெளியுறவுத்துறை செயலாளர் நிருபம ராவ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழுவும் கிருஷ்ணாவுடன் அமெரிக்கா சென்றுள்ளது.
வாஷிங்டனில் நேற்று நடந்த அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சிலின் 35ம் ஆண்டு விழாவிலும் எஸ்.எம்.கிருஷ்ணா கலந்து கொண்டார்.
ஆப்கானிஸ்தானில், நல்ல தலிவான்கள் என்று ஒரு பிரிவினருடன் அமெரிக்கா பேச்சு நடத்துவதற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்து வருகிறது. அவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்தாலோ அல்லது ஆட்சி, அதிகாரத்தில் அவர்களுக்கு பங்களித்தாலோ அது தீவிரவாதத்தை ஒழிக்க எந்த வகையிலும் உதவாது என்று இந்தியா கூறுகிறது. இதை ஹிலாரியுடனான சந்திப்பின்போது கிருஷ்ணா வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
மேலும் லஷ்கர்-ஏ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் போதிய நடவடிக்கைகளை எடு்க்கவில்லை என்பதையும் அமெரிக்காவிடம் இந்தியா சுட்டிக் காட்டவுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications