தமிழத்தில் 2,000 போலி டாக்டர்கள்!
சென்னை: தமிழகத்தில் 2000 போலி டாக்டர்கள் நடமாடுவதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநிலத் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.சுகுமார், கெளரவச் செயலாளர் டாக்டர் டி.என்.ரவிசங்கர் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் செயல்பட்டு வரும் போலி டாக்டர்களின் முகவரிகள் மற்றும் போலி டாக்டர்களின் பரிந்துரைச் சீட்டு ஆகியவையும் சேகரிக்கப்பட்டு டி.ஜி.பி. லத்திகா சரண் மற்றும் ஏ.டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அலோபதி மருந்துகளை எந்த ஒரு மருத்துவப் படிப்பும் படிக்காதவர்களும், மாற்று மருத்துவம் பயின்றவர்களும் பரிந்துரை செய்கிறார்கள்.
இதனால் தமிழகத்தில் பல இடங்களில் இந்த போலி டாக்டர்களின் எண்ணிக்கை, தகுதி பெற்ற டாக்டர்களின் எண்ணிக்கையை விட அதிகரித்து காணப்படுகிறது.
இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956, இந்திய மருத்துவ பட்டம் சட்டம் 1916, மருந்து மற்றும் அழகுசாதன சட்டம் 1940 ஆகிய சட்டங்களின்படி போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
இந்த சட்டங்களின் அடிப்படையில் வழங்கப்படும் தண்டனைகள் மிகவும் சொற்பமானதாக உள்ளது. எனவே அனைத்தையும் ஒருங்கிணைத்த போலி டாக்டர்கள் ஒழிப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.
சட்டங்களை குறுகிய காலத்தில் செயலாற்றிட வேண்டும். மேலும் காவல் துறையில் போலி மருத்துவர் ஒழிப்புப் பிரிவை அமைக்க வேண்டும்.
சட்டங்கள் முறையாக இயற்றப்படவில்லை என்றால் ஆயிரக்கணக்கான முறையான டாக்டர்கள் இருந்தாலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கினாலும் போலி டாக்டர்களை ஒழிக்க முடியாது என்றனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications