3 கர்நாடக அமைச்சர்களை பதவி நீக்க ஆளுநர் பரிந்துரை?

பெல்லாரியைச் சேர்ந்த இந்த ரெட்டிகளும், ராமுலுவும் தங்கள் பண பலத்தால் எம்எல்ஏக்களை வளைத்து முதல்வர் பதவியிலிருந்து எதியூரப்பாவை நீக்க முயன்றனர். ஒருவழியாய் இவர்களுடன் சமாதானமாய் போனதால் எதியூரப்பா தப்பினார்.
இந் நிலையில் இவர்கள் மீது பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்ட மேலவை உறுப்பினர் கொண்டைய்யா கடந்த ஜனவரி 13ம் தேதி ஆளுனர் பரத்வாஜிடம் ஒரு புகார் அளித்தார்.
அதில், இந்த அமைச்சர்கள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தில் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்து சுரங்கத் தொழில் செய்து ருகின்றனர். எனவே, அவர்களை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த, ஆளுனர் பரத்வாஜ் இந்த மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், மூன்று பேருமே ஆஜராகவில்லை. அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராயினர்.
ஆனாலும் ஜூன் 3ம் தேதிக்குள் விசாரணைக்கு அமைச்சர்களே நேரில் ஆஜராக வேண்டுமென ஆளுனர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், ஆளுனரை அமைச்சர்களும், டெல்லியில் பாஜக தலைவர்களும் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் அமைச்சர்களுக்கு ஆளுநர் அளித்த காலக் கெடு நேற்றுடன் முடிவடைந்தது. அப்போதும் அமைச்சர்கள் ஆஜராகவில்லை. அவர்களது வழக்கறிஞர்கள் மட்டும் ஆஜராயினர். அமைச்சர்கள் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லாததால் அதை நிராகரிக்க வேண்டும் என்று கோரினர். ஆனால், அதை ஆளுநர் ஏற்கவில்லை.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து கருத்துக் கேட்பதற்காக இந்தப் புகாரை இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ய ஆளுனர் முடிவு செய்துள்ளார் கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதில், ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோரின் சட்டசபை உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் பரத்வாஜ் பரிந்துரை செய்வார் என்று தெரிகிறது.
மூத்த வழக்கறிஞரான பரத்வாஜ், மத்திய சட்ட அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications