தமிழக மகளிர் காங்.தலைவி ஆனால் ஜெயந்தி நடராஜன் ஆதரவாளர் சாய்லட்சுமி
சென்னை: தமிழக மகளிர் காங்கிரஸ் அணித் தலைவராக ஜெயந்தி நடராஜனின் ஆதரவாளரான சாய்லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகளுக்குப் பஞ்சமே கிடையாது. ஒவ்வொரு கோஷ்டியும் தத்தமது பலத்தை நிரூபிக்க எந்த தூரத்திற்கும் போகத் தயங்காதவை.
ஜெயந்தி நடராஜனுக்கும் தமிழக காங்கிரஸில் ஒரு கோஷ்டி உண்டு. இந்த கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகத்தில்தான் தங்களது செல்வாக்கை நிரூபிக்க மோதிக் கொள்வார்கள்.
முன்பு மகளிர் காங்கிரஸ் தலைவராக ஜெயந்தியின் ஆதரவாளரான காயத்ரி தேவி செயல்பட்டார். பின்னர் ஜி.கே.வாசன் ஆதரவாளரான கோவையைச் சேர்ந்த மகேஸ்வரி பதவியைப் பெற்றார்.
பின்னர் 2007ம் ஆண்டு மீண்டும் ஜெயந்தியின் கை ஓங்கியது. அவரது ஆதரவாளரும், சென்னை மாநகராட்சி கவுன்சிலருமான சாய்லட்சுமி தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டார்.
தற்போது சாய்லட்சுமியை தலைவராக காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது. இதற்கான உத்தரவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஒப்புதலுடன் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் ஜனார்த்தன் திவேதி பிறப்பித்துள்ளார்.
முன்னதாக தலைவர் பதவியைப் பிடிக்க ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்த சாருபாலா தொண்டமான், கோவை மகேஸ்வரி ஆகியோர் கடுமையாக மோதினர். ஆனால் ஜெயந்தி தனது மேலிடத்து செல்வாக்கை பயன்படுத்தி சாய்லட்சுமியை தலைவியாக்கி விட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications