ஆப்கானிஸ்தான்: திருமண வீட்டில் மனித வெடிகுண்டு தாக்குதல்-40 பேர் பலி
காந்தகார்: ஆப்கானிஸ்தானில் திருமண வீட்டில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 40 பேர் பலியாயினர்.
தெற்க ஆப்கானிஸ்தானில் காந்தகார் நகர் அருகே உள்ள அர்கானாப் மாகாணத்தில் உள்ள நன்ககான் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.
இங்கு நடந்த ஒரு திருமண விழாவில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது ஆண்கள் பகுதியில் அமர்ந்திருந்த ஒரு தீவிரவாதி தான் அணிந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான்.
இதில் 40 பேர் பலியாயினர். மணமகன் உள்பட 73 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 10க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் ஆவர்.
குண்டு வெடித்த இடம் முழுவதும் உடல்கள் சிதறி கிடக்கின்றன. காயமடைந்த அனைவரும் கந்தகார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
திருமண வீட்டில் தீவிரவாதிகள் ஏன் தாக்குதல் நடத்தினார்கள் என்று தெரியவில்லை. இந்தப் பகுதியில் ஆடம்பர விழாக்கள் நடத்தக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
ஆனால், திருமண விழா ஆடம்பரமாக நடத்தப்பட்டதால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
நேடோ ஹெலிகாப்டரை வீழ்த்திய தலிபான்-4 பேர் பலி:
இந் நிலையில் தெற்கு ஆப்கானி்ஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் அமெரிக்கா தலைமையிலான நேடோ படையினரின் ஹெலிகாப்டரை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர். இதில் 4 அமெரிக்க வீரர்கள் பலியாயினர். இதன்மூலம் இந்த வாரத்தில் பலியான நேடோ வீரர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications