ஜெ. கொடநாடு பயணம்-இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு 'பயணம்'!

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை செல்லும் அவர் அங்கிருந்து கொடநாட்டுக்கு காரில் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேற்று வந்த ஜெயலலிதா அங்கு திரண்டிருந்த அதிமுக தொண்டர்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். ஒரு மணி நேரம் மட்டுமே மனுக்களை பெற்றுக் கொண்ட ஜெயலலிதா போயஸ் கார்டன் திரும்பிவிட்டார்.
இதனால் அவரிடம் மனு தர கூடியிருந்த ஏராளமான தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து தலைமைக் கழகத்தில் இருந்த அதிமுக நிர்வாகிகள் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
இப்போது விஜய்காந்தின் தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகக் கூறப்படு்ம் நிலையில் திடீரென ஜெயலலதா மீண்டும் கொடநாடு புறப்படுகிறார். அவர் எப்போது சென்னை திரும்புவார் என்று தெரியவில்லை.
இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு தாவல்:
இதற்கிடையே திமுகவில் சேரும் அதிமுக பிரமுகர்கள் வரிசையில் அடுத்ததாக பெரணமல்லூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரனும் இணையவுள்ளார்.
அதிமுகவிலிருந்து சாரை சாரையாக பலரும் திமுகவுக்குப் போய்க் கொண்டுள்ளனர். கரூர் சின்னச்சாமி இன்று திமுகவில் இணைந்தார். யாரும் அதிகம் அறி்ந்திராத ராசிபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. பழனியம்மாளும் திமுகவில் இணையவுள்ளார்.
அடுத்தபடியாக பெரணமல்லூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரனும் திமுகவில் இணையப் போவதாகக் கூறப்படுகிறது. கட்சியில் பதவிகள் தருவதற்கெல்லாம் காசு கேட்பதாக கட்சி நிர்வாகிகள் மீது சந்திரன் புகார் கூறியுள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications