தமிழுக்காக பாமகவைப் போல எந்தக் கட்சியும் பாடுபட்டதில்லை- ராமதாஸ்
சென்னை: தமிழ் வளர்ச்சிக்காக, தமிழ் உயர்வுக்காக பாமகவைப் போல எந்தக் கட்சியும் பாடுபட்டதில்லை என்று அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு முன்னதாக, மாநிலமெங்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழில் மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாமக சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு தலைமை வகித்து ராமதாஸ் பேசுகையில,
ஆட்சி மொழி, பயிற்சி மொழி, நீதிமன்ற மொழி என தமிழ் மொழியால் எல்லாம் முடியும். ஆனால், அந்தத் தகுதிகளை வழங்க தமிழக அரசால் முடியுமா?. இந்தக் கேள்வியை நாங்கள் 20 ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம்.
தமிழ் வளர்ச்சிக்காக, தமிழ் உயர்வுக்காக பாமகவைத் தவிர வேறு எந்தக் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டதில்லை. பாமக தான் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே தமிழ் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
உலகின் எந்த நாட்டிலும், அந்தந்த நாட்டின் தாய் மொழிக்கே முக்கியத்துவம் தரப்படும். ஆனால் தமிழ்நாட்டில்தான் தாய் மொழியாம் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது.
ஜப்பான், ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட எந்த நாட்டிலும் தாய்மொழி வளர்ச்சி இல்லை என்று போராட்டம் நடத்துவதில்லை. ஆனால், தாய்மொழி வளர்ச்சிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தும் அவலநிலை தமிழ்நாட்டில் தான் இருக்கிறது.
எங்கும் தமிழ் என்பது ஒரு காலத்தில் பெரும் முழக்கமாக இருந்தது. இன்று எங்கே தமிழ்? என்ற பெரும் ஏக்கம்தான் ஏற்பட்டுள்ளது. அந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் இந்தப் போராட்டம்.
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகைகள் எழுதுவது பற்றி தமிழக அரசால் 1983, 84, 90ம் ஆண்டுகளில் 3 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த ஆணையில், "விளம்பர பலகையில் 50 சதவீதம் தமிழும், 30 சதவீதம் ஆங்கிலமும், 20 சதவீதம் எந்த மொழியும் இருக்கலாம்'' என்று அறிவிக்கப்பட்டது. மேலும், அவ்வை நடராசன் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டு ஆங்கிலத்திற்கு பொருத்தமான தமிழ் வார்த்தைகள் பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் இந்த அரசாணைகள் வந்து 27 ஆண்டு ஆகியும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆனால் அரசு நினைத்தால் வெறும் 7 நாட்களில் இதை நிறைவேற்ற முடியும்.
தாய் மொழியைப் போற்றும் நாடுதான் தரணியில் உயர முடியும். தமிழருடைய எண்ணத்தில், எழுத்தில், சொல்லில் தமிழ் இல்லையெனில் தமிழும் வளராது, நாமும் வளர மாட்டோம் என்றார் ராமதாஸ்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், இந்திய ஆட்சி பணியான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வுகள் கூட தமிழில் எழுதலாம். ஆனால், தமிழை பயிற்று மொழியாக்க முடியவில்லை. மேலும் ஆங்கிலவழி பள்ளிகளில் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக வைத்துவிட்டு மற்ற அனைத்து பாடங்களையும் தமிழில் பயிற்றுவிக்கலாம் என்றார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications