ராஜ்யசபா-தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு
சென்னை: திமுகவைச் சேர்ந்த கே. பி. ராமலிங்கம், செல்வகணபதி, தங்கவேலு, அதிமுகவைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், கே. வி. ராமலிங்கம், காங்கிரஸைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்பிக்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து ராஜ்சபாவுக்கு 6 உறுப்பினர்களை தேரந்தெடுக்க வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது.
இதில் கே. பி. ராமலிங்கம், செல்வகணபதி, தங்கவேலு, மனோஜ் பாண்டியன், கே. வி. ராமலிங்கம், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் தவிர, சுயேச்சைகளாக பத்மராஜன், மனிதன், வேல்முருகன், நாகூர் மீரான் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் இவர்களது மனுக்கள் எந்த எம்எல்ஏவும் வழி மொழியாததால் அவரை தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து 6 பேரும் போட்டியின்றி ராஜ்யசபாவுக்குத் தேரந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி செல்வராஜ் அறிவித்தார்.
பழைய உறுப்பினர்களின் பதவிக் காலம் வரும் 29ம் தேதி வரை இருப்பதால் இவர்கள் அதற்கு பிறகு தான் பதவி ஏற்பார்கள்.
-
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications